For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரத் கட்சி 'டமார்'- கா.ம.க. உதயம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பிரிந்த சிலர், அகில இந்திய காமராஜர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சரத்குமாரின் செயல்பாடுகள் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், இதனால்தான் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சியைத் தொடங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தலைவராக சந்திரனும், பொதுச் செயலாளராக சம்பத்தும், பொருளாளராக ராஜசேகரனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த வாரம் கட்சியின் பொதுக்குழுவை கூட்டவுள்ளனராம். அப்போது மாநில நிர்வாகிகளை அறிவிக்கவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X