எதிர்த்து ஓட்டு போடப் போகும் காங். எம்.பி.!
{image-Kuldeep Bishnoi250_16072008.jpg tamil.oneindia.com}சண்டீகர்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்பியான குல்தீப் பிஷ்னோய் மத்திய அரசு மீதான நம்பிக்கை தீ்ர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளார். இவர் முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன் லாலின் மகன் ஆவார்.
ஹரியாணாவின் பிவானி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியான இவர், அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், தரப்படவில்லை. இதனால் கட்சியை விமர்சித்து வந்தார். இதையடுத்து இவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஹரியாணா ஜான்ஹித் காங்கிரஸ் என்று ஒரு கட்சியையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளை நான் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தேன். அவர்கள் செவி சாய்க்கவில்லை. இப்போது இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அரசியல் தற்கொலை செய்ய நான் விரும்பவில்லை. இதனால், நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து தான் வாக்களிக்கப் போகிறேன்.
நான் எம்பி பதவியை ராஜினாமா செய்து நெடு நாட்களாகிவிட்டது. ஆனால், அதை கட்சி இதுவரை ஏற்கவில்லை. இப்போது நான் எதிர்த்து வாக்களிக்கலாம் என்பதால் என்னை கட்சி பதவி நீக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஆனால், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் இவரை ஒழுங்கு கமிட்டி முன் ஆஜராகுமாறு காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், அதில் ஆஜராகாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 எம்பி தொகுதிகளில் 9 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications