3 பேரை கடத்தி ரூ.40 லட்சம் கொள்ளை-வியாசர்பாடி கும்பல் சிக்கியது
சென்னை: சென்னையில் மதுரை நகைக் கடை ஊழியர்கள் 3 பேரை நடுரோட்டில் ஆட்டோவிலிருந்து கடத்திச் சென்று தாக்கி ரூ. 40 லட்சம் கொள்ளையடித்த வியாசர்பாடியைச் சேர்ந்த கும்பல் பிடிபட்டது. இக் கும்பலைச் சேர்ந்த மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள தமிழ்நாடு ஜூவல்லரியைச் சேர்ந்த ஊழியர்கள் சிவமுருகேசன், பாலசுப்பிரமணி, இளங்கோ ஆகியோர் ரூ. 40 லட்சம் பணத்துடன் சென்னை வந்தனர்.
சென்னை மண்ணடியில் ஒரு விடுதியில் தங்கினர். தங்கம் விலை அதிகமாக இருந்ததால் நகையை வாங்க வேண்டாம் என கடையின் உரிமையாளர் பொன்னம்பலம் கூறிவிட்டார்.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு பணத்துடன் மதுரை புறப்பட்டனர். ஆட்டோவில் கோயம்பேடு பஸ் நிலையம் சென்று கொண்டிருந்த அவர்களை அமைந்தகரை சிக்னல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் வந்த 4 பேர் வழி மறித்தனர்.
நகைக்கடை ஊழியர்களையும், ஆட்டோ டிரைவரையும் தாக்கிய அவர்கள் சிறிது தூரத்தில் தயாராக நின்றிருந்த ஒரு வேனில் 3 ஊழியர்களையும் ஏற்றினர்.
மூவரையும் கத்தியால் தாக்கிய அக் கும்பல் பணப் பைகளை பறித்துக் கொண்டு நள்ளிரவில் மாதவரம் அருகே ஒரு மைதானத்தில் தள்ளி விட்டுவிட்டு தப்பிவிட்டது.
இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் தேன்தமிழ்வளவன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.
இவர்கள் விசாரணையில் இறங்கி வியாசர்பாடியை சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளனர். மேலும் இக் கும்பலைச் சேர்ந்த 8 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் இந்த 8 பேரிடம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications