ஏ,பி,சி,டி..ரெளடிகள் தரப் பட்டியல்-சரத் தாக்கு
திருப்பூர்: கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் (காடுவெட்டி குரு) கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பேசியதற்கு தற்போது கைது செய்துள்ளனர். கூட்டணியில் இருக்கும் வரை அவர் பேசியது தவறாக தெரியவில்லையா? என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது:
தமிழகம் முழுவதும் கடும் மின் வெட்டு நிலவுகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தியும் குறைவு, வினியோகமும் சரிவர இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படிக்க இயலவில்லை.
பல தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள ரவுடிகளை ஏ,பி,சி,டி என தரம் பிரித்துள்ளனர். எந்த அடிப்படையில் இப்படி காவல் துறை தரம் பிரிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசை காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்து வரும் தமிழக முதல்வர் ஏன் இதற்கு முயற்சி எடுக்கவில்லை.
கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பேசியதற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டணியில் இருக்கும் வரை அவர் பேசியது தவறாக தெரியவில்லையா . கூட்டணியில் இல்லாமல் போனதும் கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கையாகவே உள்ளது.
மத்தியில் நிலையான அரசு அமைய மக்களவை தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications