பெண் ராணுவ அதிகாரிக்கு செக்ஸ் டார்ச்சர்-விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உயர் அதிகாரிகள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறியுள்ள பெண் ராணுவ அதிகாரியின் புகார் குறித்து விசாரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் கெல்கா என்ற இடத்தில் ராணுவ கேப்டனாக பணியாற்றி வருபவர் பூனம் கவுர். பெண் ராணுவ அதிகாரியான இவர், தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதாக மூன்று உயர் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவத்திலேயே பெண் அதிகாரி செக்ஸ் தொந்தரவுக்கு உள்ளானதாக செய்தி வெளியானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ராணுவ சட்டத்தின் கீழ் ராணுவ அதிகாரிகளை கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சண்டிகரில் ராணுவ மேஜர் ஜெனரல் கமால் மொஹய் செய்தியாளர்களிடம் கூறுகையில், முழு உண்மையையும் வேரோடு வெளிக் கொண்டு வருவோம். யூகங்களின் அடிப்படையில் தனியாக விசாரணை கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+