நான் என்ன செய்வேன்.. இது மில்லியன் டாலர் கேள்வி-சோம்நாத்
ஹைதராபாத்: 22ம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நான் எப்படி செயல்படுவேன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது. 22ம் தேதி வரை அது அப்படியே இருக்கட்டும் என்று லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் சபாநாயகர் பதவியிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் சோம்நாத் சாட்டர்ஜி விலகி விடுவார் என ஒரு தகவல் உலா வந்துகொண்டுள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத் வந்த சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பதவிகுறித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது நிலை என்ன என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறுகையில், எனது வாழ்க்கையிலேயே இந்த ஒரு வாரமும் மிகக் கடினமான வாரமாகும்.
என்னைப் பற்றி நிறைய ஊகங்கள். அவற்றைக் கேட்டும், பார்த்தும் நான் சோர்வடைந்து விட்டேன்.
22ம் தேதி நான் என்ன செய்யப் போகிறேன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது. 22ம் தேதி வரை அது அப்படியே இருக்கட்டும்.
நிச்சயம் பாஜகவுடன் இணைந்து நான் வாக்களிக்க மாட்டேன். சபாநாயகர் பதவி குறித்த எனது நிலையிலும் மாற்றம் இல்லை என்றார் சாட்டர்ஜி.
இதன் மூலம் அரசை எதிர்த்து தான் வாக்களிக்க மாட்டேன் என்பதை மறைமுகமாக சோம்நாத் சாட்டர்ஜி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications