புலிகளின் முக்கிய கடல் முகாம் சிக்கியது - 30 பேர் பலி
கொழும்பு: மன்னார் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்தள முகாமான விடத்தல் தீவு பகுதியை மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இங்கு நடந்த சண்டையில், 30க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான தீவு விடத்தல் தீவு. இப்பகுதியை கடற்படை தளமாகவும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வட மேற்கு இலங்கையில், மன்னாரிலிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் உள்ள விடத்தல் தீவு அப்பகுதியில் மிகப் பெரிய நகராகும். விடுதலைப் புலிகளின் மேற்குப் பிராந்திய கடற்படை தளமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தப் பகுதியை கைப்பற்றியுள்ளதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானப்படையின் எம்ஐ -24 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் விடத்தல் தீவு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,அதில், புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் ராணுவம் கூறுகிறது.
இன்னொரு சண்டையில், விமானப்படை போர் விமானங்கள் விடத்தல்தீவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில்உள்ள கடற்புலிகளின் கூட்ட இடத்தை குண்டு வீசி தாக்கி அழித்ததாக ராணுவம் தெரிவிக்கிறது.
இப்பகுதியில் ராணுவத்தினரை எதிர்த்து 60க்கும் மேற்பட்ட விடுதலைப புலிகள் சண்டையிட்டனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர் என்று ராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
விடத்தல் தீவு கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தின் வசம் வந்திருப்பதாக ராணுவ பிரிகேடியர் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
விடத்தல் தீவை ராணுவம் கைப்பற்றியது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications