ஐஏஇஏ-இந்தியாவுக்காக தூதரை அனுப்பும் யு.எஸ்

சர்வதேச அணு சக்தி ஏஜென்சியிடம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாளை இந்தியா விளக்கம் அளிக்கவுள்ளது. இந்த நிலையில், ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ள விசேஷ தூதரை அமெரிக்கா, வியன்னாவுக்கு அனுப்பி வைக்கிறது.
அமெரிக்க வெளியுறவு அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ்தான் அந்த விசேஷ தூதர். நாளை அவர் வியன்னா செல்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கோர்மாக் கூறுகையில், வில்லியம் பர்ன்ஸ், வியன்னா செல்கிறார். ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனையை அவர் மேற்கொள்வார். இதற்கு மேல் விரிவான தகவல் என்னிடம் இல்லை என்றார்.
பர்ன்ஸ் வியன்னா செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே 45 உறுப்பு நாடுகளைக் கொண்ட என்.எஸ்.ஜியில், இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்க பாடுபடப் போவதாகவும், ஒப்பந்தம் நிறைவேற இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில், வியன்னாவுக்கு விசேஷ தூதரை அமெரிக்கா அனுப்பி வைக்கிறது.
ஏற்கனவே சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு பாதுகாப்பு ஒப்பந்த நகலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ஏஜென்சியும் தனது போர்டு உறுப்பினர்களிடம் அதை சுற்றுக்கு விட்டுள்ளது. நாளை இதுகுறித்து இந்தியா நேரில் விளக்கவுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரப்படும் எனத் தெரிகிறது.
நாளை சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு செல்லும் இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ். மேனன் தலைமை தாங்குகிறார்.
நாளைய கூட்டத்தில் ஏஜென்சியின் 35 உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களிடம் ஒப்பந்தம் குறித்து மேனன் விளக்கம் அளிப்பார். 35 பேரில் 26 பேர் என்.எஸ்.ஜி. அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள். மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 18ம் தேதிதான் இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் குறித்து அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டறிக்கை வெளியிட்டனர். நாளையுடன் அது 3வது ஆண்டை காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications