பீஜ் வாலிபாலில் ஆபாசம்: பாஜக புகார்
சென்னை: சென்னையில் நடந்து வரும் சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் வீராங்கனைகள் கண்களை உறுத்தும் ஆடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் பாஜக போலீசில் மனு கொடுத்துள்ளது.
சர்வதேச பீச் வாலிபால் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின் உள்பட உலகின் பல்வேறு நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இதில் பங்கேற்கும் வீராங்கனைகள் கவர்ச்சிகரமான உடைகளுடன் ஆடுகின்றனர். இந்த நிலையில், பாஜக துணை தலைவர் லலிதா சுபாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் சேகரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், போட்டியில் பங்கு பெறும் வீராங்கனைகள் தமிழ் கலாசாரத்துக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கண்களை உறுத்தும், உடலை வெளிக் காட்டும் வகையிலான ஆடைகளை அணிய தடை விதிக்க வேண்டும்.
விளையாட்டு என்பதை தாண்டி கவர்ச்சி இதன் மூலம் பிரதானமாக்கப்பட்டு விட்டது.
எனவே கற்கரை வாலிபால் போட்டியில், தமிழ்க் கலாச்சாரத்தை காக்கும் வகையிலான ஆடைகள் அணிய உத்தரவிட வேண்டும். அதை மீறி போட்டி நடத்தப்படுமானால், அப்போட்டிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சேகர் உறுதியளித்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications