சைக்கோ கொலைகாரனை சுட்டுப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவு
சென்னை: சென்னையைக் கலக்கி வரும் சைக்கோ கொலைகாரனை தேவைப்பட்டால் சுட்டுப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நகரின் மையப் பகுதிகளான கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம், வடபழனி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தலையில் கல்லால் நசுக்கியும், தீவைத்து எரித்தும் இவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் காவலாளிகள். கொலையாளி ஒரே நபராகத்தான் இருக்க முடியும், அவர் சைக்கோ நபராக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
சைக்கோ மனிதனின் அட்டகாசத்தால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். போலீஸை நம்பினால் வேலைக்கு ஆகாது என்ற எண்ணத்தில் மக்களே கம்புகள், கட்டைகளுடன் இரவு நேரங்களில் சாலைகளில் ரோந்து செல்வதால் காவல்துறைக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.
கொலையாளியைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய தேடுதல் வேட்டையும் நடந்துவருகிறது.
இதுவரை நான்கு பேரை போலீஸார்பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் கைதி ஒருவர்தான் இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று மாநகர காவல்துறை ஆணையர் சேகரே நேரடியாக இரவு ரோந்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சேகர் கூறுகையில், வடபழனி, அசோக்நகர், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் சமீப காலங்களில் இரவு நேரங்களில் மர்மமான முறையில் கொலை சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இதில் ஏற்கனவே நடைபெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற 3 கொலை சம்பவங்கள் தொடர்பான நபர்கள் மட்டும் தேடப்பட்டு வருகின்றனர். இந்த 3 கொலைகளும் ஒரே விதமான முறையில் நிகழ்ந்துள்ளன. பொதுமக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதற்கிடையே தேவைப்பட்டால் சைக்கோ கொலைகாரனை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications