காதலிக்க மறுத்த மாணவி படுகொலை - மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: திருமணம் செய்ய மறுத்த மாணவியை வீடு புகுத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கல்லூரி மாணவரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து உதைத்தனர். பின்னர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

ஈரோடு முனிசிபல் காலனியைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ்-சாந்தி. அதே பகுதியில் உள்ள கல்யாண விநாயகர் கோயில் நிர்வாகியாக உள்ளார் செல்வராஜ். இவர்களின் மகள் பிரவீணா (18), மகன் பரணி (15).

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் பிரவீணா சேர்ந்தார். கல்லூரி தொடங்காததால் வீட்டில் இருந்தார்.

திருப்பூரைச் சேர்ந்த கந்தசாமியின் மகன் வெங்கடாசலபதி (24). செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் எம்எஸ்ஸி படித்து வருகிறார். திருமண தோஷ நிவர்த்திக்காக கல்யாண விநாயகர் கோயிலில் பரிகார பூஜையை மேற்கொண்டனர் வெங்கடாஜலபதி குடும்பத்தினர். கடந்த 3 மாதங்களாக பூஜை செய்து வருகின்றனர்.

பூஜை பொருட்களை வாங்குவதற்காக செல்வராஜ் வீட்டுக்கு சென்ற வெங்கடாசலபதிக்கு பிரவீணா மீது காதல் ஏற்பட்டது. ஒருதலையாக காதலித்த வெங்கடாசலபதி பிரவீணாவின் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

இதுகுறித்து தந்தை செல்வராஜிடம் பிரவீணா கூறியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் கோயிலுக்கு வந்த வெங்கடாசலபதி, செல்வராஜிடம் பிரவீணாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு செல்வராஜ் அவரை திட்டி அனுப்பியுள்ளார். மேலும் அவரது உறவினர்களிடமும் முறையிட்டு வெங்கடாசலபதியை கண்டிக்கும்படி கூறினார் செல்வராஜ்.

இந்நிலையில் நேற்று கோயிலுக்கு வந்தார் வெங்கடாசலபதி. அங்கு செல்வராஜ் இருப்பதை பார்த்த அவர், அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டில் பிரவீணா, அவரது தாய் சாந்தி மட்டும் இருந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் வெங்கடாசலபதி. பிரவீணா தண்ணீர் எடுக்க சமையறைக்கு சென்றார்.

அவரை பின்தொடர்ந்த வெங்கடாசலபதி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரவீணாவை வற்புறுத்தினார். அதற்கு பிரவீணா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலபதி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீணாவை சரமாரியாக குத்தினார்.

அலறியடித்தபடி வீட்டுக்கு வெளியே பிரவீணா ஓடி வந்தார். ஆனால் விடாமல் துறத்தி வந்த வெங்கடாசலபதி, பிரவீணாவை மீண்டும் கத்தியால் குத்தினார். பிரவீணா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு சாந்தி ஓடிவந்தார். அதற்குள் வெங்கடாசலபதி தப்பியோடினார்.

சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வெங்கடாசலபதியை மடக்கி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

படுகாயம் அடைந்த பிரவீணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

பிரவீணாவின் உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்ததாக பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் வெங்கடாசலபதியை வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+