பெயர் குழப்பத்தால் வேறு கைதி விடுதலை - சிக்கலில் சிறை அதிகாரிகள்!
சேலம்: சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதே பெயரில் உள்ள வேறு கைதியை சிறை அதிகாரிகள் ஜாமீனில் விடுதலை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே கடந்த ஏப்ரல் 24 ம் தேதி ராசாத்தி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எஸ். பாப்பாராபட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த பழனியப்பன் மகன் ராஜா (35) கைது செய்யப்பட்டார்.
அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் ராஜாவும் (26) இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பழனியப்பன் மகன் ராஜாவுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலையில் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ராஜா கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.
ஜாமீன் உத்தரவு ராசிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. உத்தரவு சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜாமீனில் வெளிவரும் மகனை அழைத்து செல்ல பழனியப்பன் குடும்பத்தினரும் வழக்கறிஞரும் சிறைக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது, பழனியப்பன் மகன் ராஜா வருவதற்குப் பதிலாக பாலன் மகன் ராஜா வெளியே வந்தார்.
இதை பார்த்த பழனியப்பன் குடும்பத்தினரும் வழக்கறிஞரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிறை அதிகாரிகளிடம் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் தாங்கள் நீதிமன்ற உத்தரவுப்படியே நடந்துள்ளாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெயர் குழப்பம் காரணமாக நடந்த இச்சம்பவம் சிறைத்துறை அதிகாரிகளை தடுமாற வைத்துள்ளது. பாலன் மகன் ராஜா ஜாமீனுக்கே விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
--
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications