கோவை மருத்துவமனையில் ஆண் குழந்தை திருட்டு
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு பிறந்த ஆண் குழந்தையை மர்ம பெண் திருடிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி கார்த்திகா செல்வி (37). நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகா செல்வி பிரசவத்துக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி சேர்க்கப்பட்டார்.
நேற்றிரவு கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு துணையாக தோழி சவுமியா உடனிருந்தார். குழந்தை பிறந்த சிறிது நேரம் கழித்து காய்ச்சல் வந்ததால் சவுமியா வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம பெண் ஒருவர் கார்த்திகாவின் உறவினர் என்று கூறி குழந்தைகள் வார்டுக்கு சென்றார். கார்த்திகா கண் அசந்த நேரம் பார்த்து குழந்தையை அந்த பெண் திருடிச் சென்றுவிட்டார்.
குழந்தை காணாமல் போனதை அறிந்த கிருத்திகா கதறி அழுதார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணையும் குழந்தையையும் வலை வீசித் தேடி வருகின்றனர்.
--
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications