காங். விருந்தில் பாஜக எம்பி; பாஜக விருந்தில் காங். எம்பி!
டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அளித்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக எம்.பி கலந்து கொண்டார். அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணி அளித்த விருந்தில், காங்கிரஸ் எம்.பி கலந்து கொண்டு சலசலப்பை ஏற்படுத்தினார்.
தத்தமது ஆதரவு எம்.பிக்களை கெளரவிப்பதற்காகவும், ஆதரவாளர்களின் தலைகளை எண்ணும் வகையிலும், காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தனித் தனியாக விருந்து நிகழ்ச்சிகளுக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட விருந்தில், காங்கிரஸ் அதிருப்தி எம்.பியும், முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னாய் கலந்து கொண்டார்.
இது இப்படி இருக்க காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட டின்னரில், பாஜகவைச் சேர்ந்த எம்.பி பங்கேற்றார்.
பாஜகவிலிருந்து விலகி சமாஜவாடி கட்சியில் இணைந்த எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங்தான் அவர். டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்த விருந்துக்கு அவர் வந்திருந்தார்.
அமர்சிங்தான் சரண் சிங்கை அழைத்து வந்து செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
காங் விருந்தில் எல்ஜி-செஞ்சி:
இந்த விருந்தில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பிக்களான செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் கூட கலந்து கொண்டனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், தனது கட்சியின் எம்.பிக்களோடு பங்கேற்றார்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications