'தம்' அடிப்பதி்ல் தகராறு: இளைஞர் கொலை!
சென்னை: டீக் கடையில் தம் அடித்தவருக்கும், இன்னொருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை, வள்ளல் பாரி நகரைச் சேர்ந்தவர் ரகு. இவரும், இவருடைய நண்பர் சுரேஷ்குமாரும் அங்குள்ள டீக் கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி புகைக்க ஆரம்பித்தனர்.
அப்போது வேலு என்பவர் தலைமையில் அங்கு அமர்ந்திருந்த சிலர் அதை ஆட்சேபித்தனர். இங்கு புகை பிடிக்காதீர்கள் என்று ரகு, சிவக்குமாரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு மூண்டது. அப்போது வேலு குழுவினர், ரகுவையும், சிவக்குமாரையும் அடித்துள்ளனர். பின்னர் கத்தியால் குத்தியுள்ளனர்.
சரமாரியாக கத்திக்குத்துக்குள்ளான ரகு சம்பவ இடத்திலேயே பலியானார். சுரேஷ்குமார் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரகுவின் உறவினர்கள் சாலை மறியல் மற்றும் கல்வீச்சில் இறங்கினர். சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி தாக்கினர். இதில் 12 டூவிலர்கள், 3ஆட்டோக்கள், 12க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் அங்கு விைரந்து வந்து மோதலில் ஈடுபட்ட குழுவினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications