எங்களிடம் 41 எம்பிக்கள்- அமர்சிங் தகவல்
டெல்லி: சமாஜ்வாடி கட்சிக்கு மேலும் சில பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தங்களது கட்சியிடம் இப்போது 41 எம்பிக்கள் உள்ளதாகவும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
மேலும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று குண்டர்களை வைத்து தங்களது எம்.பிக்களை உ.பி. முதல்வர் மாயாவதி மிரட்டி வருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் சற்று முன்பு பேசுகையில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது. மீறி வாக்களித்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அரசுக்கு ஆதரவாக உள்ள எம்.பிக்களை, மது ஆலை அதிபர்களின் உதவியுடன் குண்டர்களை வைத்து மிரட்டி வருகிறார் மாயாவதி.
எம்.பிக்களை மிரட்டுவதாகவும், குதிரை பேரம் நடத்துவதாகவும் எங்களைப் பார்த்து இடதுசாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இப்போது அணி சேர்ந்துள்ள கட்சியினர்தான் இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
மாயாவதியின் அரசியல், ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும். அரசியலின் புனிதத்தைக் கெடுக்கும் செயலாகும்.
இப்போது சில பகுஜன் எம்பிக்களையும் சேர்த்து எங்களிடம் 41 எம்பிக்கள் உள்ளனர் என்றார் அமர்சிங்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
இதற்கிடையே எஸ்பி-பிஎஸ்பி இடையே மோதல் அதிகரித்து வருவதால், டெல்லியில் அமர்சி்ங்கின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications