பலியான மீனவர் குடும்பத்துக்கு அரசு வேலை-திருமா
நாகை: இலங்கை கடற்படையால் கொலைப்பட்ட தமிழக மீனவர் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இலங்கை அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளன் பேசியதாவது
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு அவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.
இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது, பயிற்சி அளிப்பது போன்றவற்றை உடனே நிறுத்த வேண்டும். மீனவர்களை தாக்கியது விடுதலை புலிகள் தான் என்று இலங்கை அரசு கூறுவது அவதூறான செயலாகும்.
தமிழக அரசு சட்டசபையை கூட்டி தமிழக மீனவர்களின் நலன் காக்க தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications