ரூ.57 லட்சம் வழிப்பறி- இலங்கை அகதி கைது
கும்பகோணம்: கும்பகோணம் அருகில் ரூ 57 லட்சம் பணம் வழிப்பறி செய்த சம்பவத்தில் இலங்கை அகதி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு செட்டித் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன். பாமாயில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடைகளுக்கு பாமாயில் சப்ளை செய்ததில் வசூலான ரூ.56 லட்சத்து 60,000ஐ கணக்காளர் ரவியிடம் கொடுத்து கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் டி.டி. எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
பணத்துடன் வேனில் ரவி வங்கிக்கு புறப்பட்டார். சுந்தரப்பெருமாள் கோயில் அருகே 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வேனை வழி மறித்தது. வண்டிக்குள் இருந்த ரவியிடம் இருந்த பணத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் விஜய் என்ற வாலிபர் சரணடைந்தார்.
அவரை போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜய், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருப்பதும், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு வாகனங்களும், கூலிப்படையும் கொடுத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து விஜயிடம் இருந்த ரூ.96,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய் கொடுத்த தகவலின்படி ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications