மாற்று பாதையில் சேது சமுத்திர திட்டம்-மத்திய அரசு ஏற்பு?

இந்த விஷயத்தில் இறுதி முடிவை வரும் 29ம் தேதி தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரிமன் தெரிவித்தார்.
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும், ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி இந்து அமைப்புகள், பாஜக, ஜெயலலிதா, சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரித்து வருகிறது.
நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, பேசிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். மத நம்பிக்கையும் முக்கியம், இயற்கையும் முக்கியம். இயற்கைக்கு கொஞ்சம் சேதம் ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை, நம்பிக்கைகள் புண்படும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.
இதை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும் என்றனர்.
இதற்குப் பதிலளித்த நாரிமன், இந்தத் திட்டத்துக்காக எந்தப் பாலத்தையும் நாங்கள் இடிக்கவில்லை. அப்படி எந்தப் பாலமும் அங்கில்லை. அந்தப் பாலத்தை ராமரே தனது அம்பால் சிதறடித்துவிட்டதாக பத்ம புராணமும், கம்ப ராமாயணமும் சுட்டிக் காட்டுகின்றன.
சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வருவதற்காக போடப்பட்ட பாலத்தை, இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்னர் ராமர் இடித்து விட்டதாக கம்ப ராமாயாணம் கூறுகிறது. எனவே எந்தப் பாலத்தையும் இடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.
இந் நிலையில் இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறுகையில்,
இந்தத் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட பல்வேறு துறைகளின் 18 கமிட்டிகளில் 17 கமிட்டிகள் சேது சமுத்திரக் கால்வாயை மாற்றுப் பாதையில் அமைக்கலாம் என்று கூறியுள்ளன.
ஒரே ஒரு கமிட்டி தான் ராமர் பாலத்தை உடைத்து கால்வாய் தோண்டலாம் என்று கூறியுள்ளது என்றனர்.
இதற்கு பதிலளித்த நரிமன், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் யோசனையை தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் இறுதி முடிவை வரும் 29ம் தேதி தெரிவிக்கிறோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications