பெட்ரோல் சாப்பிடும் தாத்தா!
மடிகேரி: பேய்த்தனமாக பெட்ரோல் விலை இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது தாத்தா ஒருவர் தினசரி பெட்ரோல் குடித்து அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறார்.
சாப்பாடு, தண்ணீர் இல்லாவிட்டால் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் பெட்ரோல், டீசல் இல்லாமல் இனிமேல் வாழவே முடியாது என்று கூறும் அளவுக்கு பெட்ரோல், டீசலின் பயன்பாடும், அவசியமும் மக்களை ஒரு வழி செய்து வருகிறது.
அதிலும் சென்னை வாசிகளிடம் இன்று உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது என்று கூறினால் அவ்வளவுதான் தவித்துப் போய் விடுவார்கள். அந்த அளவுக்கு அனுபவித்து விட்டார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மடிகேரி அருகே ஒருவர் தினசரி பெட்ரோலை சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவரது பெயர் ஹம்சா. வயது 59. பெட்ரோல் ஹம்சா என்று கூறினால்தான் சுத்துப்பட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். தினசரி இவர் சாப்பிடுகிறாரோ இல்லையோ, குறைந்தது 100 மில்லி பெட்ரோலை சுவைக்காவிட்டால் தூக்கமே வராதாம்.
10 வயது முதலே இவருக்கு பெட்ரோல் வாசனை பிடித்துப் போய் விட்டது. அது முதல் இன்று வரை பெட்ரோலை குடித்தும், அதன் சுவையை நாவில் வைத்து ரசித்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சோம்வார்ப்பேட்டை அருகே உள்ள கர்கள்ளி கிராமத்தில் வசித்து வருகிறார் ஹம்சா. இவர் யாருமற்ற அனாதையாவார். பெற்றோர் யாரென்றும் தெரியாதாம்.
10 வயதாக இருக்கும்போது ஒர்க்ஷாப் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அப்போது பெட்ரோல் வாசனை இவரை ஈர்த்துள்ளது. இதையடுத்து பெட்ரோலை எடுத்து வாயில் வைத்துப் பார்த்துள்ளார். அந்த சுவை இவருக்குப் பிடித்துப் போய் விட்டது.
அதன் பின்னர் பெட்ரோலுக்கு அடிமையாகி விட்டார் ஹம்சா. இப்போதெல்லாம் பெட்ரோல் இல்லாமல் இவரால் இருக்கவே முடியாது என்ற நிலை.
பெட்ரோலியப் பொருட்களின் விலை கிடுகிடுவென ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஹம்சாவின் இந்த பெட்ரோல் தாகம், அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைக்கவில்லை. அவருடைய நிலைமை தெரிந்து பொறுத்துக் கொள்கிறார்களாம்.
தனது பெட்ரோல் தாகம் குறித்து ஹம்சா கூறுகையில், எனக்கு பெட்ரோல் என்றால் உயிர் என்று இங்குள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். எனவே நான் பெட்ரோல்சாப்பிடுவதை யாரும் வித்தியாசமாக பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், இங்குள்ள பெட்ரோல் பங்கில் எனக்காக தினசரி 100 மில்லி பெட்ரோலை இலவசமாக கொடுக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஹம்சா புன்னகையுடன்.
சரி, தாத்தா, பெட்ரோல் குடித்தால் உடம்புக்கு ஒன்றும் ஆகாதா என்று கேட்டால், அதெல்லாம் கப்சா. இத்தனை காலமாக குடிக்கிறேன். ஆனால் எனது உடல் உறுப்புகளில் ஒரு சேதமும் இதுவரை ஏற்பட்டதில்லை. பல டாக்டர்கள் என்னைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு பக்காவாக இருக்கிறேன் என்று சர்ட்டிபிகேட்டே கொடுத்துள்ளனர் என்கிறார் ஹம்சா.
ஹம்சாவுக்குப் பிடிக்காத ஒரே விஷயம் - நெருப்பும், புகையும்தான். தனது உடலில் பெட்ரோல் கலந்திருப்பதால் எங்கே வெடித்து விடுவோமோ என்று பயந்து, நெருப்பு, புகை பக்கத்தில் அண்டவே மாட்டாராம்.
பெட்ரோல் விலை ஊரை தாளித்துக் கொண்டுள்ள நிலையில், ஹம்சாவைப் பார்க்கும்போது, ஊரே பற்றி எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் நினைவுக்கு வருகிறது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications