மதிமுகவிலிருந்து எல்.ஜி-செஞ்சி நீக்கம்-வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிமுகவின் கட்டுப்பாட்டிற்கும், கண்ணியத்திற்கும் மாறாக செயல்பட்டதால் எல்.கணேசன் கழகத்தின் அவைத் தலைவர் பொறுப்பிலிருந்தும், செஞ்சி ராமச்சந்திரன் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் 2007 ஜனவரி 10ம் தேதி கூடிய கழகத்தின் பொதுக்குழு தீர்மானத்தின்படி நீக்கப்பட்டார்கள்.
கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த அவர்கள் முயன்றதால் பிரச்சனையை இந்தியத் தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வைகோவை பொதுச் செயலாளராகக் கொண்டுள்ள அமைப்புதான் உண்மையான மதிமுக என்று கடந்த மே மாதம் 30ம் தேதியன்று தீர்ப்பளித்தது.
2008 ஜூன் 21, 22ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க மதிமுக முடிவு செய்து அறிவித்தபோது, அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கழக நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் முடிவுக்கு விரோதமாக எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வாக்களித்துள்ளதால், அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.
அதே போல தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் ஒன்றியச் செயலாளர் பொன். சேதுராமன், போடிநாயகன்னூர் நகரச் செயலாளர் ஆரோசெல்வன் ஆகியோரும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று வைகோ அறிவித்துள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications