வக்கீல்களுக்கு சித்திரவதை: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னையைச் சேர்ந்த 3 வக்கீல்களை கோவை போலீஸார் தாக்கி சித்திரவதை செய்தது தொடர்பான புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மலைசுப்ரமணியத்தை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி மலைசுப்ரமணியத்திற்கு, நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி கோவை கணபதி பகுதியில் ஜெயந்தி என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஜெயந்தியும், அவருக்கு ஆதரவாக வாதிட வந்த சென்னையைச் சேர்ந்த வக்கீல்கள் இளங்கோ, சின்னழகு, மணிவண்ணன் ஆகியோரைக் காணவில்லை.
இதையடுத்து ஜெயந்தியின் சகோதரரான வக்கீல் கோகுலகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
அதில், போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 வக்கீல்கள் மற்றும் ஜெயந்தியின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி வக்கீல் கோகுலகிருஷ்ணன் மனுவில்கோரியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு ஜூலை 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது போலீஸ் ஏட்டு ஒருவரை வக்கீல்கள் சிலர் சேர்ந்து சரமாரியாக அடித்தது நினைவிருக்கலாம். அன்று மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தப் புகார் குறித்து இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், ஜெயந்தியை தாக்கினாரா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போதுசேலம் போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்கீல்கள் கூறியுள்ள புகார்கள் பொய்யானவை. கணபதி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில், நான்கு பேரும் தாங்களாகவே தங்கியிருந்தனர். போகும்போது பில்லைக் கூட கட்டாமல் போய் விட்டனர் என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது கோகுலகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வக்கீல்கள் பால்கனகராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் எழுந்து, கோவை போலீஸாரைக் காக்க சேலம் போலீஸார் முயலுகின்றனர். எனவேதான் போலியான விசாரணை அறிக்கையை தாக்கல்செய்துள்ளனர் என்றனர்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி மலைசுப்ரமணியம் இதுகுறித்து விசாரித்து ஆகஸ்ட் 25ம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications