சோம்நாத்தை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை: காரத்
ஹைதராபாத்: சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியை விட்டு நீக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் காரத் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடனேயே சோம்நாத் சாட்டர்ஜி தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் இணைந்திருக்க வேண்டும்.
ஆனால் கட்சியின் சிந்தனையோடு சோம்நாத் சாட்டர்ஜி ஒத்துப் போகவில்லை. எனவேதான் சோம்நாத்சாட்டர்ஜி மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்க பொலிட்பீரோவுக்கு மத்திய குழு அதிகாரம் அளித்தது.
பதவி விலகுமாறு அவரிடம் கூறியபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். எனவேதான் அவரை கட்சியிலிருந்து நீக்கினோம்.
சோம்நாத் சாட்டர்ஜியை நீக்கியது துரதிர்ஷ்டவசமான ஒன்று. ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. சபாநாயகர் பதவியில் நீடிப்பதா, இல்லையா என்பதை நான்தான் முடிவுசெய்வேன் என்று சோம்நாத் கூறினால், கட்சியில் அவர் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும். அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம்.
பொலிட்பீரோ முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய குழுவிடம் சோம்நாத் சாட்டர்ஜி அப்பீல் செய்யலாம் என்றார் காரத்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications