இடதுசாரிகள் மீது துவேஷம் இல்லை: பிரணாப்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன், கசப்பான வகையில் உறவை இடதுசாரிகள் முறித்துக் கொண்டாலும் கூட எங்களுக்கு அவர்கள் மீது எந்த துவேஷமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து என்டிடிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு அவர்கள் விலகியதால் வருத்தம் உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த துவேஷமும், கசப்புணர்வும் இல்லை.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கிடையில்தான் கூட்டணியை தொடர்ந்து வந்தோம். இப்போது அவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதால் எங்களுக்கு அவர்கள் மீது வருத்தம் உள்ளதே தவிர கசப்புணர்வு எதுவும் இல்லை.
இடதுசாரி கட்சிகள் மீதோ, இடதுசாரி தலைவர்கள் மீதோ எங்களுக்கு எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை. என்னை அவர்கள் மிகக் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளனர். இருந்தாலும் எனக்கு அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை.
மீண்டும் இடதுசாரிகளுடன் கூட்டணி ஏற்படுமா என்து எனக்குத் தெரியாது. அது சூழ்நிலையைப் பொறுத்தது. நான் அரசியல் ஜோதிடராக மாற விரும்பவில்லை.
இந்தக் கூட்டணி உருவாவதற்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ஜோதிபாசு. நான் அவரை சந்தித்தபோது கூட்டணி உடையக் கூடாது என்று விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்த முயற்சியில் நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று அவரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் பிரணாப்.
-
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications