கூட்டணி: காங்கிரஸுடன் சமாஜ்வாடி ஆலோசனை
டெல்லி: எதிர்காலத்தில் கூட்டணியை எப்படி கொண்டு செல்வது, கூட்டணியை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன், சமாஜ்வாடி கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்ப சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுதான் மிக முக்கியமானதாக இருந்தது. இதையடுத்து எதிர்காலத்திலும் கூட்டணியை நீடிக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
கூட்டணியை வலுப்படுத்துவது, உபியில் கூட்டணியை தொடருவது குறித்து விவாதிக்க இரு கட்சிகளும் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், காங்கிரஸ் தலைவர்களுடன் நேற்று பேச்சு நடத்தினார். அப்போது உ.பி.தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, வருகிற நவம்பர், டிசம்பர் மாத கால கட்டத்தில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலை சந்திப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகளில் காங்கிரஸ் தீவிரமாகியுள்ளது.
இங்கும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்கிறது காங்கிரஸ். இங்கு சமாஜ்வாடி கட்சிக்கு 7 எம்.பிக்களும், 23 எம்.எல்.ஏக்களும் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் - சமாஜ்வாடி இணைந்து போட்டியிட்டால் கணிசமான எம்.பி.தொகுதிகளையும், சட்டசபை தொகுதிகளையும் பிடித்து விட முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.
கடந்த 2003ல் ம.பியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெறும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 38 இடங்களே கிடைத்தன.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications