அத்வானி-3 பாஜக எம்.பிக்கள் மீது சமாஜ்வாடி அவதூறு வழக்கு
லக்னோ: தனது கட்சிக்கு எதிராக அவதூறான புகார்களைக் கூறி பெயரைக் கெடுக்க முயல்வதாக கூறி பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் 3 பாஜக எம்.பிக்கள் மீது சமாஜ்வாடி கட்சி லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துல்ளது.
இதுதொடர்பாக லக்னோ சிபிஐ, சிறப்பு கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் கவின்சிலரும், வக்கீலுமான கிஷோர் லால் யாதவ் இன்று ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
அதில், பாஜக எம்.பிக்கள் அசோக் அர்கல், மகாவீர் சிங் பகோரா, அஜ்ஜான் சிங் குலஸ்தே ஆகியோர் லோக்சபாவில் ஜூலை 22ம் தேதி கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களைக் காட்டி அந்தப் பணத்தை சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங்தான் கொடுத்தார் என்று கூறினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறி அந்தப் பணத்தைக் கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த மூன்று எம்.பிக்களும் சமாஜ்வாடி கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் பேட்டிகளையும் அளித்தனர்.
இதேபோல அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும் சமாஜ்வாடி தலைவர்களை அவமதிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார். இந்த நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
3 எம்.பிக்களும் புகார் அளித்தனர்:
முன்னதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் உத்தரவின் பேரில், சமாஜ்வாடி தரப்பிலிருந்து தங்களுக்குப் பணம் கொடுத்ததாக புகார் கூறிய 3 பாஜக எம்.பிக்களும் இன்று சபாநாயகர் சோம்நாத்தை சந்தித்து முறைப்படி எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தனர்.
இந்தப் புகாரில் அமர்சிங், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ரேவதி ரமன் சிங், காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் ஆகியோர்தான் தங்களுக்குப் பணம் கொடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
6 சமாஜ்வாடி எம்பிக்கள் நீக்கம்:
இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த 6 எம்பிக்களை அக் கட்சி நீக்கியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications