ராமர் பாலம்: மத்திய அரசு விதண்டாவாதம் செய்கிறது-ஜெ
சென்னை: தான் கட்டிய பாலத்தை ராமர் தானே இடித்து விட்டதாக மத்திய அரசு விதண்டாவாதம் செய்து கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை கொதிப்படைய வைத்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகெங்கும் வாழும் பலகோடி மக்களால் போற்றி வணங்கப்படும் ராம பிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம்தான்; அந்தப்பெயருக்கு வேறு எந்த சிறப்பும் இல்லை என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்தது.
ஆனல் தற்போது ராமர் உருவாக்கிய பாலத்தை அவரே உடைத்து போட்டு விட்டார்; இப்போது ராமர் பாலம் என்று எதுவும் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வாதத்தை முன் வைத்திருக்கிறது. மத்திய அரசின் இப்புதிய விதண்டாவாதம்
நாட்டில் மீண்டும் ஓர் உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும்.
தான் உருவாக்கிய பாலத்தை ராம பிரான் தானே தகர்த்தார் என்று ராமாயணத்தில் எங்கும் கூறப்படவில்லை என்று ராமாயணத்தை கற்றுத் தெரிந்த வல்லுநர்கள் அறுதியிட்டு உறுதியாக கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது.
1963ம் ஆண்டு டிசம்பர் மாதம் காஷ்மீரில் ஹஸ்ரத்பல் திருத்தலத்தில் இருந்த புனிதப்பொருள் களவாடப்பட்டதால் பெரும் கலவரம் வெடித்தது. பெரு முயற்சிக்கு பிறகு அந்தப் பொருள் மீட்கப்பட்டது. களவு போன பொருள் புனிதப்பொருளா? அது உண்மையானதா? தொன்மையானதா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல், மன வேதனையிலிருந்து இஸ்லாமிய சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புனிதப் பொருள் மீட்கப்பட அப்போதைய மத்திய அரசு முயன்றது.
அதைப் போலவே டேன் பிரவுன் எழுதிய 'தி டாவின்ஸி கோட்' என்ற புத்தகம் திரைப்படமாக 2006ல் திரைக்கு வந்தபோது கிறிஸ்துவ சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாக திரையரங்குகளில் அப்படம் காட்டப் படுவது ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் கோடானு கோடி இந்துக்களின் இறைநம்பிக்கை என்று வருமேயானால் அதில் ஒரு அக்கறையின்மை மத்திய அரசின் செயல் பாடுகளில் வெளிப்படுகிறது.
இந்துக்களை காயப்படுத்தினாலோ, அவர்களின் மத உணர்வுகளை களங்கப்படுத்தினாலோ அதில் இந்த மத்திய அரசுக்கு துளியும் ஆட்சேபமில்லை. இது என்ன வகையான மதச்சார்பின்மை கொள்கையோ தெரியவில்லை.
ராமர் சேதுவைத் தகர்த்து மதக்கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அதிமுக சகித்துக் கொள்ளாது. அத்தகைய முயற்சி ஏதும் நடைபெற்றால் அதனை எல்லா முறைகளிலும் அதிமுக எதிர்க்கும். உண்மையான மதச்சார்பின்மையை காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் போராடுவோம் என்பது உறுதி என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications