பெங்களூரில் தினமும் 6 மணி நேரம் மின்தடை
பெங்களூர்: ஐடி தலைநகரான பெங்களூர் கடும் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 20 சதவீத மின்வெட்டை அமல்படுத்தப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிக்க மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி 2 மணி நேரமும், நகராட்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் தினசரி 4 மணி நேரமும் மின் தடை அமல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தொழிற்சாலைகளுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு நிலவும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகளுக்கு வாரம் 2 நாள் மின்தடையை அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் ஐடி தலைநகரான பெங்களூர் கடும் மின் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து அங்கு 20 சதவீத மின் தடையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தினசரி 6 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது.
இதுவும் தற்காலிகமாகதான். மின் உற்பத்தி அதிகரிக்காவிட்டால் அல்லது போதிய மழை இல்லாவிட்டால் மின் தடை 8 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மின் தடை குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், கிட்டத்தட்ட நாள் முழுவதும் பரவலாக மின் தடை காணப்படுகிறது. இதை திட்டமிட்டு அமல்படுத்தினால் மக்களுக்கு சிரமம் இருக்காது. இதனால் விவசாயிகளும், தொழில் நிறுவனங்களும் முன் கூட்டியே திட்டமிட்டுசெயல்பட முடியும் என்றார்.
இது போதாதென்று டீசல் பற்றாக்குறையும் பெங்களூரை வாட்டிக் கொண்டிருக்கிறது. பெங்களூருக்கு ஒருநாளைக்கு 1800 கிலோலிட்டர் டீசல் தேவைப்படும். ஆனால் அதில் 40 சதவீத அளவுக்கு சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் டீசலை நம்பியிருக்கும் வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications