அகமதபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது

அகமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர புலனாய்வு விசாரணை நடந்துவருகிறது. சந்தேகத்தின் பேரில் பலரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முதல் கைது நிகழ்ந்துள்ளது.
டானி லிம்டா என்ற இடத்தில் வைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் அப்துல் ஹாலிம். இவர் அஹ்லே ஹதீஸ் என்கிற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்.
இவர் 2002ம் ஆண்டு நடந்த கோத்ராவுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவத்திலும் தொடர்புடையவர் என போலீஸார் கூறுகின்றனர். கோத்ரா வன்முறைக்குப் பின்னர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
ஹதீஸ் அமைப்பை நிறுவியது லஷ்கர் இ தொய்பா ஆகும். ஹதீஸ் அமைப்பில் இருப்பவர்களில் பலர் சிமி அமைப்பிலும் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு தீவிரவாத செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை மத்திய அரசும், மாநில அரசும் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹலீமுக்கு 14 நாள் போலீஸ் காவல்:
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அகமதாபாத் நீதிமன்றத்தில் அப்துல் ஹாலீம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரிக்க 14 போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதுகுறித்து அகமதாபாத் இணை ஆணையர் ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், அப்துல் ஹாலீமிடம் விசாரணை நடத்தினால் பல தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். சந்தேகத்துக்குரிய வகையில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் தீவிரமாக கண்காணித்து விசாரித்து வருகிறோம்.
சந்தேகத்துக்குரிய வகையில் உள்ள 2 சைக்கிள் கடை உரிமையாளர்கள் மற்றும் ஒரு சைக்கிள் டிஸ்ட்ரிபியூட்டரை கண்காணித்து வருகிறோம் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications