இலவச கலர் டிவி கேரளாவுக்கு கடத்தல்
செங்கோட்டை: கேரளாவுக்கு கடத்த இருந்த தமிழக அரசின் இலவச கலர் டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத், பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழக-கேரள எல்லை பகுதியில் செங்கோட்டை போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரள பதிவு எண் கொண்ட ஜீப்பை பரிசோதித்தபோது தமிழக அரசால் வழங்கப்படும் 6 இலவச கலர் டிவிகள் சீல் உடைக்கப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜீப் டிரைவர் ரமேஷ், அவருடன் இருந்த காளிமுத்து ஆகியோரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் கடந்த 26ம் தேதி கடையநல்லூர் தொகுதி கம்பனேரியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கலர் டிவிக்கள் என்றும் டிவி ஒன்று ரூ.1,500 என்ற விலைக்கு வாங்கி கேரளாவில் ரூ.2,500க்கு விற்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இலவச கலர் டிவிக்களும் ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டன. ரமேஷ், காளிமுத்து 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தமிழக இலவச கலர் டிவிக்கள் கேரள சந்தைக்கு கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications