திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!
திருச்சி: முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணம் செய்த ரயில் டிக்கெட் கண்காணிப்பாளருக்கும், ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்தவருக்கும் இடையே அடிதடி நடந்தது.
டிக்கெட் கண்காணிப்பாரை ரயில்வே போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரித்தபோது அவரை விடுவிக்க முயன்ற ரயில்வே ஊழியர்களைக் கலைக்க ரயில்வே போலீசை படையைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டார்.
சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மணிமந்திரன்.
ரயில் விழுப்புரம்-விருத்தாச்சலம் இடையே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ரகுராமன் என்ற ரயில்வே டிக்கெட் கண்காணிப்பாளரை எழுப்பி அடையாளம் கேட்டார்.
அவர், தான் ஒரு ரயில்வே கண்காணிப்பாளர் என்றும், லீவில் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அடையாள அட்டை கேட்கவே அதையும் காட்டினார்.
ஆனால், திருப்தியடையாத மணிமந்திரன் அவரை மேலும் குடையவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இந் நிலையில் ரயில் திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ரகுராமனை இறக்கிய மணிமந்திரன், அவரை ரயில்வே போலீஸ் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றார்.
அங்குள்ள கேஷ் கார்ட் ரூமில் வைத்து அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதையறிந்த ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு விரைந்தனர். ரகுராமனுக்கு ஆதரவாக வாதாடிய அவர்களுக்கும் ரயில்வே போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து மணிமந்திரனை அவர்கள் தாக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து தனது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார் மணி. இதனால் சிதறி ஓடிய ரயில்வே ஊழியர்கள் மீண்டும் அங்கு வந்து மணியை தாக்க முயன்றனர்.
அவர் தப்பியோடியதையடுத்து கேஷ் கார்ட் அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர்.
இச் சம்பவம் தொடர்பாக மணிமந்திரனும், ரகுராமனும் கண்டோன்மெண்ட் ரயில்வே காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் கொடுத்துள்ளனர்.
ரயில் நிலைத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications