தீவிரவாத மிரட்டல்: தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
ஆக்ரா: தீவிரவாத தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்தும், 353வது ஷாஜஹான் உருஸ் விழாவை முன்னிட்டும் தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சிகரெட், தீப்பெட்டி ஆகியவற்றை தாஜ்மஹால் வளாகத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகானின் 353வது உருஸ் விழா தொடங்கியுள்ளது. இதன் நிறைவு விழா ஜூலை 31ம் தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் பெருமளவிலான யாத்ரீகர்கள் தாஜ்மஹாலுக்கு வருவார்கள்.
தற்போது பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பல்வேறு நகரங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உருஸ் விழா கமிட்டியினர் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி எளிதில் தீப்பற்றக் கூடிய புகையிலை பொருட்கள், சிகரெட்டுகள், தீக்குச்சிகள் ஆகியவற்றை தாஜ்மஹாலுக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பேன்டுவாத்தியத்திற்கும் தாஜ்மஹாலுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களுடன் வாத்திய குழுவினரை அழைத்து வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களைப் போலவே உ.பியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications