எம்.பிக்களுக்கு லஞ்சம்: நாடாளுமன்ற குழு விசாரணை தொடக்கம்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 3 பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுவின் விசாரணை இன்று தொடங்குகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களவையில் கடந்த 22-ந் தேதி நம்பிக்கை வாக்கு கோரியது. அப்போது பாஜகவைச் ேசர்ந்த சேர்ந்த அசோக் அர்கால், பகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோரா ஆகியோர் தங்கலுக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் லஞ்சம் தரப்பட்டதாக கூறி ரூ. 1 கோடி பணத்தை லோக்சபாவில் வந்து கொட்டி பெரும் பரபரப்பை ஏர்படுத்தினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மூத்த காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திரதேவ் தலைமையிலான 7 எம்.பி.க்கள் கொண்ட குழுவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அமைத்துள்ளார்.
இந்த குழுவில் பாஜகவைச் சேர்ந்த வி.கே.மல்கோத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முகமது சலீம், சமாஜ்வாடி கட்சியின் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேவேந்திர பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜேஷ் வர்மா மற்றும் திமுகவின் செ.குப்புசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் புகார் கொடுத்த 3 எம்.பி.க்கள் மற்றும் லஞ்சம் கொடுக்கப்பட்டதை வீடியோ எடுத்ததாக கூறப்படும் தனியார் தொலைக்காட்சி குழுவினரிடம் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் லஞ்சம் கைமாறியதை காட்டும் ஒரிஜினல் வீடியோ கேசட்டையும் பார்வையிட உள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications