ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்-விசாரணை
பெரம்பலூர்: பெரம்பலூர் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருந்ததாக சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் பெரம்பலூர் எஸ்பிக்கு புகார் அனுப்பியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது கனரா வங்கிக் கிளை. இந்த வங்கியில் தினசரி வரவு, செலவு சரிபார்த்த பின்பு வைப்புத் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கியின் பணப் பாதுகாப்பு பெட்டகத்தில் அந்த பணம் வைக்கப்படும்.
மேலும் பாதுகாப்பு வசதி கருதி, பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
சில வாரங்களுக்கு முன்பு வங்கியின் பணப் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில் 100 ரூபாய் நோட்டுகளில் 48-ம், 500 ரூபாய் நோட்டுகளில் 27-ம் என மொத்தம் 18 ஆயிரத்து 300 ரூபாய்க்கு 75 - கள்ள நோட்டுகள் இருந்ததாக சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் ராமச்சந்திரன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
புகாரின் பேரில், மாவட்ட எஸ்பி உத்தரவின் படி மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கனரா வங்கி பண பாதுகாப்பு பெட்டகத்தில் கள்ள நோட்டு வந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications