ஒகேனக்கல்-டெல்லி செல்லும் கர்நாடக குழு
பெங்களூர்: ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேச அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுடன் டெல்லி செல்ல இருப்பதாக கர்நாடக பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
ரூ. 1,334 கோடி செலவில் தமிழக அரசு திட்டமிட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் சட்ட விரோதமானது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகாவில் வன்முறை வெடித்ததில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
இந் நிலையில் தற்போது கர்நாடக சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
இன்று கேள்வி நேரத்தின்போது, மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ புட்டே கௌடா ஒகேனக்கல் பிரச்னையை எழுப்பினார்.
அதற்கு நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில்,
இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவுள்ளோம். அதைத் தொடர்ந்து அனைத்து கட்சி பிரதிநிதகள் கொண்ட குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.
சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். கர்நாடகாவின் உரிமையை ஒருபோதும் இழக்க மாட்டோம்.
கர்நாடக மற்றும் தமிழக அதிகாரிகள் குழு 3 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியி்ல் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பான கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகள் ஒரு முறைதான் வந்தனர் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications