குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.தான் காரணம்: பாஜக
டெல்லி: பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புதான் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக லோக்சபா துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், நாட்டில் இன்று நிலவும் வன்முறைச் செயல்களுக்கு ஐ.எஸ்.ஐ.தான் காரணம். பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஐ.எஸ்.ஐக்கு நேரடி தொடர்பு உள்ளது.
இப்போது சூரத்தில் தொடர்ந்து வெடிகுண்டுகள் சிக்கி வரும் சம்பவத்திலும் ஐ.எஸ்.ஐ.யின் சதி அடங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் கெடுக்க முயலுகிறது ஐஎஸ்ஐ.
காபூல் இந்திய தூதரகம் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ தான் காரணம் என ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதிகரித்துள்ள தீவிரவாத செயல்களுக்கு ஐஎஸ்ஐதான் காரணம் என அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு அமைதியைக் குலைக்க முயல்வதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத்தே குற்றம் சாட்டியுள்ளார். இதை அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதத் தடுப்பு பிரிவை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விரிவான விசாரணைக்கு இது பெருமளவில் உதவும். அதேபோல பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
தீவிரவாதிகள் விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பரஸ்பரம் குற்றம் சாட்டுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் இருந்து தீவிரவாதிகளின் தீய நோக்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்றார் மல்ஹோத்ரா.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு











Click it and Unblock the Notifications