மதுரை தல்லாகுளத்தில் 'கார்' வெடிகுண்டு புரளி
மதுரை: மூன்று நாட்களாக ஒரே இடத்தில் ஒரு காரில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிளம்பிய புரளியால் மதுரை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தல்லாகுளம் அருகே உள்ளது கமலாநகர். இங்கு யூனியன் கிளப் உள்ளது. இந்த கிளப் அருகே கடந்த மூன்று நாட்களாக ஒரு டாடா சுமோ கார் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த காரில் வெடி குண்டு வைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளம்பியது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
சர்ச்சைக்குரிய அந்த காரை சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் வெடி குண்டுகள் ஏதும் இல்லை என உறுதி செய்தனர்.
பின்னர் காரின் உரிமையாளர் செந்தில்வேலன் என்பவரை தேடிபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காரில் பேட்டரி இல்லை என்பதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செந்தில்வேலன் கூறியுள்ளார். அவரிடம் காருக்கான ஆவணங்களை வாங்கி சரிபார்த்த பின்பு காரை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையடுத்துபொது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications