திருச்சி பயோ டெக் பேராசிரியருக்கு ரூ. 40 லட்சம் ஆய்வுதவி
திருச்சி: சோயா பீன்ஸின் சத்துணவு தரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.கணபதிக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின் பயோ டெக்னாலஜி துறை ரூ. 40 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளது.
சோயா பீன்ஸில், 7 சதவீதத்திற்கும் குறைவான அளவில் 'ஆல்பா டோகோபெரால்' உள்ளது. இதை அதிகரிக்கும் வகையிலான ஆய்வுப் பணியில் பேராசிரியர் கணபதி ஈடுபட்டுள்ளார்.
அவரது ஆய்வுக்காக மத்திய அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோ டெக்னாலஜி துறை, ரூ. 40 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இதுதவிர அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில் ரூ. 20 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளது. திசு கல்ச்சர் மூலம் 'வித்தானியா சோம்னிபெரா'வின் உற்பத்தியைப் பெருக்குவது தொடர்பான முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்காக இந்த நிதியுதவி பேராசிரியர் கணபதிக்கு
வழங்கப்படுகிறது.
வித்தானியா சோம்னிபெரா (அஸ்வகந்தா) என்பது மருத்துவ பயன்பாடு கொண்ட தாவரமாகும். மன அழுத்தம், மலட்டுத்தனம், நோய் எதிர்ப்பின்மை, உடல் உறுதியின்மை ஆகியவற்றைப் போக்க இது பயன்படுகிறது. இது தொடர்பான மருந்து அஸ்வகந்தாவின் வேரிலிருந்து எடுக்கப்படுகிறது.
அஸ்வகந்தா, அருகி வரும் தாவர இனம். எனவே இதன் உற்பத்தியைப் பெருக்குவது தொடர்பான ஆய்விலும் பேராசிரியர் கணபதி ஈடுபட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications