முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் மங்கட் மரணம்
டெல்லி: முன்னாள் இந்திய டெஸ்ட் வீரர் அசோக் வினூ மங்கட் மும்பையில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 61.
இந்தியாவுக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மங்கட். 6 அரை சதங்களை அடித்துள்ளார். நடுக்கள வீரராக விளையாடத் தொடங்கிய மங்கட், 1969ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பின்னர் தொடக்க வீரராக ஜொலித்தார்.
1971ல் டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் மங்கட் அடித்த 97 ரன்கள் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தது. இதன் மூலம் அந்தத் தொடரை சமண் செய்தது இந்தியா.
அஜீத் வடேகர் தலைமையிலான அணியில் மங்கட் இடம் பெற்றிருந்தபோது, 1971ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து, மேற்குஇந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக சில காலம் செயல்பட்டார் மங்கட். அவரது தந்தை வினூ மங்கட்டும் டெஸ்ட் வீரர்தான். அவரது மகன்கள் ஹர்ஷ், மிஹிர் மங்கட் ஆகியோர் டென்னிஸ் வீரர்களாக உள்ளனர். இந்தியாவின் சார்பில் ஹர்ஷ் டேவிஸ் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மங்கட் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், காலே டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து மங்கட் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications