வேட்டையாடியவர்கள் மீது வனத்துறை சுப்பாக்கிச் சூடு
செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியில் வேட்டையாட முயன்றவர்கள் மீது வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவருக்கு காயமேற்பட்டது.
கேரள மாநிலம் தென்மலை-ஆரியங்காவு இடைப்பட்ட பகுதியிலுள்ள அம்பநாடு வனப்பகுதி கேரள வனப்பகுதி ஆகும். இங்கு யானை, மிளா, மான் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் உள்ளன. இங்குள்ள மூங்கில் கம்புகளை செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிலர் சட்ட விரோதமாக வெட்டி செல்வது வழக்கம்.
நேற்று இரவு இந்த வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சிலர் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த வனத்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மணி (25) என்பவர் காயமடைந்தார். விசாரணையில் அவர்கள் செங்கோட்டையை அடுத்த கற்குடியைச் சேர்ந்த மணி, மகேஷ், குட்டிராஜா, மாரியப்பன், இசக்கி துரை, சண்முகம், சுந்தர் ஆகியோர் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மணிக்கு இடுப்பில் குண்டடிப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications