சீனா மற்றும் தைவானில் நிலநடுக்கம்
பெய்ஜிங்: சீனாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 231 பேர் காயமடைந்தனர். அதேபோல தைவானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. பிங்க்வு மற்றும் பெய்ச்சுவான் ஆகிய பகுதிகளுக்கு இடையே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
சிச்சுவான் தலைநகர் செங்க்டுவிலும் அதிர்வு உணரப்பட்டது. இதில் 231 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த மே 12ம் தேதி சிச்சுவான் மாகாணம் உள்பட சீனாவில் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 69,000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தைவானிலும்...
தைவான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஹூவாலியன் என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். சேத விபரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications