காழ்ப்புணர்ச்சியால் என் மீது பொய் புகார்: அமைச்சர் சுரேஷ்ராஜன்
சென்னை: அரசியில் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா கடந்த 18.4.2008 அன்று நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் நடைபெறாத ஒரு சம்பவத்தை நடைபெற்றதாக மாவட்ட துணை ஆட்சியர் ஜெனார்தனன் என் மீது பொய் புகார் கூறியுள்ளார். அவர் கூறியது போல எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் விசாரித்தாலே உண்மை தெரிந்துவிடும்.
இது, என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சுயநலவாதிகளின் சூழ்ச்சி என்றே கருதுகிறேன். கட்சியின் வளர்ச்சியைக் கண்டும், அரசுக்கு இருக்கின்ற நற் பெயரை களங்கப்படுத்தவும், வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து குறை கூறுவதற்கு எந்த பிரச்னையும் இல்லாததால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதிமுகவினர் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் சுரேஷ் ராஜன் அரசு அதிகாரியை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications