காபூல் இந்திய தூதரக தாக்குதல்: விசாரணை நடத்த பாக். ஒப்புதல்

கொழும்பு சார்க் மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த கிலானி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானில் தேர்தல் நடந்து, கிலானி பிரதமரான பின்னர் இருதலைவர்களும் சந்தித்துப் பேசியது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்திய நிகழ்வுகள் (காபூல் இந்திய தூதரகத் தாக்குதல், பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகள்) குறித்த தனது கவலையை, கருத்தை மிகவும் வெளிப்படையாக பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர அனுமதித்தால் இருநாடுகளின் உறவும் முன்னேற்றப் பாதையில் இருக்க முடியாது என்பதையும் பிரதமர் மன்மோகன் சிங், கிலானியிடம் எடுத்துரைத்தார். இது பேச்சுவார்த்தையையும் பாதிக்கும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜூலை 7ம் தேதி காபூல் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐஎஸ்ஐக்கு தொடர்பு இருப்பது குறித்தும் கிலானியிடம் பிரதமர் விளக்கினார்.
மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவது குறித்தும் கிலானியிடம், மன்மோகன் சிங் புகார் கூறினார்.
காபூல் சம்பவம் தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என கிலானி, பிரதமரிடம் உறுதியளித்துள்ளார் என்றார் மேனன்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications