சூரத் சிவில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சூரத்: சூரத்தில் உள்ள சிவில் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த சில நாட்களில் இதுவரை மொத்தம் 28 வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடித்து செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்காமல் போய் விட்டன.
அடுத்தடுத்து குண்டுகள் சிக்கி வருவதால் சூரத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
இந்த நிலையில் சூரத்தில் உள்ள சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று வந்த அக்கடிதத்தில், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் சுமார் நான்கு மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டலால், மருத்துவமனையில் இருந்த 5000க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பீதியில் மூழ்கியிருந்தனர். ஆனால் குண்டு எதுவும் இல்ைல என்று தெரிவிக்கப்பட்ட பின்னரே அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அகமதாபாத் நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் கடந்த 26ம் தேதி குண்டுவெடித்தது என்பது நினைவிருக்கலாம்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications