கருணாநிதி காலில் விழுந்த அதிமுக பஞ்சாயத்து தலைவி நீக்கம்-ஜெ உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் கருணாநிதி காலில் விழுந்து ஆசி பெற்ற ஆண்டிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் மலர்விழி அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சித்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 385 பஞ்சாயத்து தலைவர்களுக்கு கார்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து பல பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே போன்று ஆண்டிப்பட்டியை சேர்ந்த அதிமுக பஞ்சாயத்து யூனியன் தலைவி மலர்விழியும் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கார் சாவியை பெற்றுக் கொண்டு அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த தகவல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவனத்திற்கு சென்றது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், ஆண்டிப்பட்டி ஊராட்சி தலைவி மலர்விழியை கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை பொறுப்புகள் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவரிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+