தாக்குதல் சதி: இன்னொரு புழல் கைதிக்கும் தொடர்பு

சமீபத்தில், நெல்லையில், அப்துல் கபூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலி அப்துல்லாவின் திட்டப்படி வெடிகுண்டு தயாரித்ததும், ஆகஸ்ட் 1 மற்றும் சுதந்திர தினத்தின்போது தமிழகத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அலி அப்துல்லா சதிச் செயலில் ஈடுபட்டதாக புதிய வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னையில் பிடிபட்ட ஹீரா மற்றும் அப்துல் கபூர், அலி அப்துல்லா ஆகியோரை பாளையங்கோட்டையில் வைத்து போலீஸார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டிஐஜி கண்ணப்பன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. சுதந்திர தினத்தன்று பத்து இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் இவர்களது கூட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதவிர முன்பு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் 10 பேரும் அலி அப்துல்லாவின் கூட்டத்தில் இணைந்துள்ளனராம்.
இவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். எனவே இவர்களைப் பிடித்தால்தான் சதிச் செயலை முழுமையாக தடுக்க முடியும் என்பதால் இவர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
இக்கும்பலைப் பிடிக்க கேரள மாநிலம் காசர்கோடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மதுரை, திருச்சிக்கும் போலீஸ் படைகள் விரைந்துள்ளன.
இந்த வேட்டையில், நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி காவல்துறையைச் சேர்ந்த 7 தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்னொரு கைதிக்கும் தொடர்பு:
இந்த நிலையில் அலி அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜா ஹுசேன் என்ற கைதிக்கும் இந்த சதித் திட்டத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
ராஜா ஹூசேனும், அலி அப்துல்லாவும் ேசர்ந்துதான் இந்த சதித் திட்டத்ைத தீட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜா ஹூசேனை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விரைவில் ராஜா ஹூசேனையும் காவலில் எடுத்து போலீஸார் சென்னைக்கு வரவுள்ளனர்.
சிக்கினாரா தெளபீக்?:
இதற்கிடையே, இந்தக் கும்பலில் முக்கியப் புள்ளியான தெளபீக் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் வெடிகுண்டுகளுடன் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்திலிருந்து தப்பிய அவர் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதை கியூ பிரிவு போலீஸார் மறுத்தனர். இந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
நேற்று கேரளாவில் தெளபீக் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.
அதிராம்பட்டினத்தைச் ேசர்ந்த தெளபீக் 7 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். வெடிகுண்டுகளை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்.
இஸ்லாமிய பாதுகாப்பு படை என்ற அமைப்பை தோற்றுவித்து தமிழகம் முழுவதும் குண்டு வைக்க சதி செய்த போது தெளபீக்கும் அவரது கூட்டாளிகள் 26 பேரும் கூண்டோடு கைதானார்கள்.
ஜெயிலில் இருந்த தவுபீக் ஜாமீனில் வெளியே வந்தவுடன் சென்னை மண்ணடி பகுதியில் தங்கியிருந்து இறைவன் ஒருவனே என்ற இயக்கத்தை
உருவாக்கி சதிச் செயல்களில் இவர் ஈடுபட்டு வந்தார். கபூர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார்.
தற்போது கையில் வெடிகுண்டுகளுடன் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர கதியில் இயங்கி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications