குசேலனை எதிர்த்து திராவிட பறையர் கழகம் போராட்டம்
சென்னை: குசேலன் படம் திரையிடப்படுவதை எதிர்த்து சென்னையில் அப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு திராவிடப் பறையர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஓகனேக்கல் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக சென்னையில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தான் பேசியதற்காக கன்னடர்களிடம் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்தது, தமிழகத்திற்கு எதிராக உள்ளது. எனவே அவர் நடித்த குசேலன் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என்று திராவிட பறையர் முன்னேற்ற கழகம் கூறி இருந்தது.
நேற்று அந்த கழகத்தின் பொதுச்செயலாளர் ரா.கோ.ராசசேகர் தலைமையில் குசேலன் படம் திரையிடப்பட்டு உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஐநாக்ஸ் மல்டிப்ளக்ஸ் தியேட்டரை முற்றுகையிட வந்தனர்.
கைகளில் கொடியுடன் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ரஜினிகாந்த்தை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர் முன்பும் திராவிடர் பறையர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications