தமிழகத்தை பிரிக்க டாக்டர் சேதுராமன் கோரிக்கை
மதுரை: தமிழகம் முன்னேறப்பாதையில் செல்ல தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மூமுக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
மூமுக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தென்மாநில இயக்கம் என்ற ஒரு அமைப்பை துவக்கியுள்ளார். இந்த அமைப்பின் செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது: வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கூறியவர்கள் இன்று ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் தென் மாவட்டங்கள்தான் தேய்கிறது.
பெரும்பாலும் எந்த தொழிற்சாலைகளும் வட மாவட்டங்களில்தான் தொடங்கப்படுகிறது. தென் மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளை குறைத்துவிட்டனர். தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை இரண்டாக பிரிப்பதுதான் எங்களது கோரிக்கை. காவிரியை நடுவில் வைத்து தமிழகத்தை இரண்டாக பிரிக்கலாம். தெற்கு பகுதி 20 எம்பி தொகுதியும், 134 சட்ட சபை தொகுதிகளையும் கொண்டுள்ளது.
எனவே திருச்சிக்கு தெற்கே புதிய மாநிலம் உருவாக்க வேண்டும். அதற்கு தலைநகரமாக மதுரை செயல்பட வேண்டும். அதுவும் இந்திய அரசுக்கு உட்பட்தாக இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் எப்படி சிறப்பாக செழித்து இருந்ததோ அதே போன்று மீண்டும் மாறும் என்றார்.
சேதுராமன் பேசிய முழு வீடியோ டேப்பை ரகசிய போலீசார் தேடி வருகின்றனர். அந்த பேச்சு டேப் கிடைத்தால் அதில் அரசுக்கு எதிராகவோ, அல்லது பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவோ அவர் பேசியிருந்தால் அவர் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications