சீனாவில் தீவரவாத தாக்குதல்-16 போலீஸார் பலி
பெய்ஜிங்: சீனாவி்ல் போலீஸ் நிலையத்துக்குள் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 4 நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வட மேற்கு ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கஷ்கர் நகர போலீஸ் நிலையத்தில் காலை பயிற்சிக்காக போலீசார் கூடியிருந்தனர். அப்போது லாரியில் வந்த அதை இருவர் போலீஸ் நிலையத்துக்குள் வேகமாக செலுத்தினர். திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் சில போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.
இந்த திடீர் தாக்குதலில் 14 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 போலீஸாரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் இறந்தனர்.
தகவலறிந்த போலீசார் அந்தக் கும்பலை விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில் ஜிங்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் தெரியவந்துள்ளது.
ஜிங்ஜியாங் மாகாணத்தில் கிழக்கு துர்மேனி்ஸ்தான் இஸ்லாமிக் இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், நடந்தது தீவிரவாத தாக்குதல் என சீன போலீசார் கூறியுள்ளனர்.
வரும் 8ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications