ரஜினி வீடு முற்றுகையா?-இந்துமுன்னணி கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட குசேலன் படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள்.
ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?.
தமிழர்களின் நலனுக்காக வீட்டை முற்றுகையிடுவதாக இருந்தால் காங்கிரசார் முதலில் கருணாநிதியின் வீட்டைத் தானே முற்றுகையிட வேண்டும்.
அதை விட்டு விட்டு ஆவடிக்கு வரும் முதலமைச்சருக்கு காவடி தூக்கிகளான காங்கிரசார் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக் கேடு மட்டுமல்ல, ஏமாற்று வித்தையும் ஆகும்.
திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17ஐ தமிழர் எழுச்சி நாளாக நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் வெளிநாட்டவர்களான சேகுவேரா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் படங்களை எல்லாம் போட்டு தங்களுடைய எல்லை கடந்த தேசபக்தியை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.
இதை எல்லாம் கண்டிக்க வக்கற்ற காங்கிரஸ் ரஜினிகாந்தை சாடுவது வெட்கக் கேடு, ராஜீவ் காந்தி கொலை சரிதான் என்று இவர்கள் ஒப்புக் கொள்வது போல இது அமைத்திருக்கிறது.
விடுதலை சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னி அரசு என்பவர் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவியதாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட உடனே விசாரணை ஏதுமின்றி அரசு ஆதரவுடன் ஜாமீனில் வெளி வந்துவிட்டார்.
இப்போது, தமிழக அரசு இந்த விளம்பரத்தையாவது தடை செய்ய வேண்டும் என்று தேசபக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கபாலு, இளங்கோவன், வாசன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் ஜனநாயக விரோதமாகச் செயல்படுவதை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா? என்று கேட்டுள்ளார் ராம கோபாலன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications